மங்கல இசை மரபு - திரு பி.எம்.சுந்தரம்


Ø  
  திரு பி எம் சுந்தரம், குறிப்பிடத்தக்க நமது தவில் இசை முன்னோடிகளில் ஒருவரான, நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் அவர்களின் புதல்வர்.

Ø  பல்வேறு இசை விற்பன்னர்களிடம் முறையாகச் சங்கீதம் பயின்ற பின்னர்,  பாலமுரளி கிருஷ்ணா அவர்களின்  ஆலோசனையின் பேரில் இசை வரலாற்றாய்வினைத் துவங்கி, இன்று வரை மிக நுட்பமாக இத்துறையில் செயல்பட்டுக்கொண்டிருப்பவர், திரு பி எம் சுந்தரம்.

Ø  68 நாதஸ்வரக்கலைஞர்கள், 43 தவில் கலைஞர்களையும் உட்படுத்தி அவர்களின் கலை நுட்பங்கள் மற்றும் வெளிப்பாடுகள் குறித்து தொகுக்கப்பட்ட “மங்கல இசை மன்னர்கள்” எனும் புத்தகம் இவரது 20 ஆண்டு கால உழைப்பின் பயனாய் இசை உலகிற்கு கிடைத்த அறிய ஆவணமாகும்.

Ø  அருவியின் இந்நிகழ்வுக்கு மூலமும் இதுவே.

Ø     நாதஸ்வரம், தவில் ஆகிய கருவிகள் கோயில்களின் அன்றாட வழிபாட்டிலும், விழாக்களிலும் பிரதானமாக இசைக்கப் பெற்று வந்தன. மங்கல இசையாக, சம்பிரதாயமாக வாசிக்கப்பட்டு வந்த இக்கருவிகளின் இசையை முழுக்கச்சேரியாகக் கேட்கக்கூடிய சந்தர்ப்பங்கள் அரிதாகி, இன்று இல்லாமலே போய்விடக்கூடிய சூழலில் இந்நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது.

Ø  பி எம் சுந்தரம் அவர்கள் தனது கல்லூரி நாட்களில் ஆங்கிலத்தில் எழுதிய தான்சேனின் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு 1995-ல் குவாலியரைச் சேர்ந்த தான்சேன் ஸ்மாரக் ஸமிதி கலாபாரதி விருது வழங்கி சிறப்பித்துள்ளது. தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்.

    திரு சுந்தரம், மாசசூட்டஸ் பல்கலைகழகத்தின் வெஸ்லின் கனெக்டிகட் மற்றும் நார்ட்டன் கல்லூரிகளில் இசைத்துறையில் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்
        இவரது, இந்நிகழ்வின் வீடியோ இணைப்பினை கீழே தந்துள்ளோம்.....
No comments:

Post a Comment