சிறார் கூட்டாளி
தன்னை நாடகக்காரனாக ஆக்கியது தாத்தாதான் என்கிறார் சரவணன் என்னும் பேராசிரியர் வேலு சரவணன், புதுவைப் பல்கலைகழகத்தில் நிகழ்கலைத் துறைத் தலைவரான இவர் ஒரு நடிகனை பாத்திரமாக மாற்றுவது, ஒட்டுமொத்தமான நாடக வடிவமைமைப்புக்கான புரிதல் என்பவை தனக்கு பேரா ராமானுஜம் மூலம் தான் வாய்த்ததாய் பெருமிதம் கொள்கிறார்.கூட்டாக வாழும் மகிழ்ச்சியை இழந்த மனிதன் தனிமையின் துயரங்களை சேகரித்து வருகிறான். மனித நாகரீகத்தின் தெளிவான கண்ணாடியாக விள்ங்கும் நாடகம், மனிதர்கள் கூட்டாக சங்கமிக்கிற வாய்ப்பை ஏற்படுத்துகிறது. அது, வாழ்கை மீது நம்பிக்கையையும் உற்ச்சாகத்தையும் தருகிறது. சடங்கு, கேளிக்கை என்பதிலிருந்து மாறி நாடகக்கலை மிகச்சிறந்த கல்வியியல் வடிவமாகத் தொடங்கியிருக்கிறது.     குழந்தைகளை அப்பருவத்தில் மேதைகளாக்கும் இன்றைய பெற்றோரின் முஸ்தீபுகளை சாடும் இவர், ” குழந்தை மனம் உலகைக் கற்கும் தருவாயில் கனவுமயமானது. அவ்வியல்பின் பிண்ணணியில் உருவாகும் குழந்தைகள், நாடகமும், குதூகலமும், கொண்டாட்டமும் கொண்டதாகத்தானே இருக்கும்” என தனது நாடக மனதின் பொது இயல்பினை தெரிவிக்கிறார்.
பள்ளிக்கூடங்களும், வகுப்பகளும் மிகுந்த புதிர்களை தன்னகத்தே கொண்டுள்ளன, தீராத கற்றல் வேட்கையோடு இக்குழந்தைகள் கூடுகிறார்கள். எழுதுதல், படித்தல், வீட்டுப்பாடம், மனப்பாடம் என இயங்கும் ஏட்டுப் படிப்புக்காக மட்டும் அவர்கள் பள்ளிக்கு வரவில்லை. மாறாக தங்களுக்கு காத்திருக்கும் புது விஷயங்களுக்காகவும் ஒருவரோடொருவர் சந்தித்துக்கொள்ளவும் இக்குழந்தைகள் பள்ளிக்கு வருவதாகப் பார்க்கிறார், சரவணன். குழந்தைகளின் மொழி, உணர்வுகளின் ஒலி நயங்களை இசைப்பதாக வெளிப்பட்டு சொற்களின் பொருளை விட உச்சரிக்கும் குரலோசை அவர்களுக்கு இன்பமளிக்கிறது. எனவே, அந்த அடிப்படையிலேயே குழந்தைகள் நாடகத்துக்கு உகந்த மொழி உருவாகிறது. குழந்தைகள் வளமான எண்ணங்களில் இயங்குபவர்கள். அதற்கேற்ப குழந்தைகளுக்கான படைப்புகளும் நிகழ்வுகளும் வண்ண மயமாக இருக்க வேண்டும். தாய் தந்தை தாத்தா பாட்டி ஆசிரியர் மற்றும் உறவினர்கள் அனைவரிடமும் குழந்தைகள் ஒரு கோமாளியைத்தான் எதிர்பார்க்கிறார்கள். 
பள்ளிக்கூடங்களில் ஒரு கோமாளி ஆசிரியர் இருந்தால் நல்லதுதானே…? மேற்கத்தைய நாடுகளில், பள்ளிகளில், குழந்தைகள் நாடகத்துக்கான தனித்துறைகளும், சிறப்பு பயிற்சியாளர்களும் உள்ளனர். அப்படி ஒரு கோமாளி நமது குழந்தைகளுக்கும் வேண்டும் என்று சொல்லும் சரவணன், இந்நிகழ்வுக்காக திரு சரவணன் அவர்களைத் தொடர்பு கொண்டபோது, உடனே ஒத்துக்கொண்டதோடு நிகழ்வு நடக்கவிருந்த அதே பள்ளியில் பயிலும் சிறார்கள் ஒரு 50 பேர் தேவைப்படுவார்கள் என்று மட்டும் கூறினார். அதன் படியே நிகழ்வு ஏற்பாடாகி நிகழ்வன்று கிடைத்த மூன்று மணிநேர இடைவெளியில் அக்குழந்தைகளை பயில்வித்து மிகச்சிறந்த இயல்பான ஒரு கூட்டு வெளிப்பாட்டினை சாதித்துக்காட்டி உண்மையிலேயே மிறள வைத்தார். 

இத்தருணத்தில் இச்சிறார் குழு குறித்த ஒரு தகவல்: பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு இந்த தேவையை தெரியப்படுத்தியவுடன், அப்பள்ளியை நடத்தும் ஒரு மடத்தின் முன்னாள் தலைமையின் பிறந்த நாள் நிகழ்வுகளுக்காக அனைத்து மாணவர்களும் பயிற்சியில் இருந்ததால் மீதமுள்ள சில சிறார்களை நமக்கு தந்தனர். இவர்கள் அனைவரும் அப்பள்ளி ஆசிரியரின் பார்வையில் பின் தங்கிய மாணாக்கர்கள்….. இம்மாணவர்கள் தங்களை உருமாற்றிக்கொண்ட விதமும் அவர்கள் நடித்துக்காட்டிய ஒரு நவீன நாடகமும் அப்பள்ளி நிர்வாகத்தையும், பெற்றோர்களையும் ஒரு சேர வியப்பிலாழ்த்தியது என்றால் மிகையாகாது.

No comments:

Post a Comment