உறைந்த காலம் - கே ஜெயராம்


புகைப்படக்கலை குறித்த ஒரு ஆரம்பப் புரிதலுக்கான தொடக்கப்புள்ளியாக திட்டமிடப்பட்டஜெயராம் அவர்களின்காட்சி விளக்கம் மிகுந்த வரவேற்ப்பை பெற்ற ஒரு நிகழ்வாக இனிதே நடந்து முடிந்தது. 


 


ஜெயராமின் இயற்கையுடனான உறவு, இவரது படைப்புகளில் ஆழ்ந்த தத்துவமாக ரூபம் கொண்டுள்ளது என்றால் அது மிகையாகாது. இயற்கையும் மனிதனும் இணையும் தருணம், அமைதியான, ஆரவாரமில்லாத ஒரு அற்புதம். முழு ஈடுபாட்டுடன் இதைக் கண்டுணர்தல் நமது கடமை. ஜெயராமின் ஊடகக்காட்சிகள், உயிரினங்களின் அரிதான கணங்களை நம் முன் கொண்டு நிறுத்தும் அதே வேளையில், உழைப்பின் மேன்மையையும், அதன் மூலம் நமது வாழ்வாதாரங்களில் சிலதையேனும் இந்தா பெற்றுக்கொள் என்று சொல்லும் மிக அரிதான கருணையின் தூய்மை நமக்கு வசப்படுவது, உண்மையிலேயே பெரிய அனுபவம்தான். அவர் குறிப்பிடுவது போல், இந்த கானுயிர் ஜீவிகள் வேலை நிறுத்தம் செய்தால், என்னவாகும் நமது (ஏற்கனவே நொய்ந்து தொங்கும்) உணவுச்சங்கிலிக்கு…?.

 

பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்நிலை ரகசியத்தைக் கட்டவிழ்க்கும் தீர்கதரிசி போன்றவர் ஜெயராமன். 

காட்டுப்பூவுக்கும் வாசம் உள்ளது போல இந்தக் காட்சிகள் நமது மனதினை அமைதியாக்கி இயல்பாக சிருஷ்டியின் பேருண்மையை உணர வைக்கின்றன. இதை உணர்வதன் மூலம் நமது இருப்புக்கு அர்த்தம் பிறக்கிறது.


No comments:

Post a Comment