எது நல்ல சினிமா- பதிவுகள்
எது நல்ல சினிமா- பதிவுகள்
தியடோர் பாஸ்கரன்-பங்கேற்பு-உரை

             
சினிமா பற்றி அவதானிப்பும் அவை பற்றி அறிந்நு கொள்ள விழையும் மனங்களும் அதிகம். சினிமா பற்றி நாள் கிழமை பொழுது என்றின்றி பேசிக்கொண்டே இருக்கும் சமூகம் நம்முடையது. ஒரு பொழுதும் சுவாரசியம் குறையாதது. அருவியின் சினிமா பற்றிய நிகழ்வு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த முறை இந்தியத் தொழில் வர்த்தக சபையின் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. ஒரு கட்டமைப்புடன் நேர்த்தியாக நடைபெற்ற நிகழ்வு என்று சொல்லலாம். நல்ல செய்திகளை,தரமான படைப்புகளைக் கொண்டு சேர்ப்பதற்கு எடுக்கும் முயற்சிகள் குறைந்த பட்சம் ஒரு அறிதல் அளவிலாவது வேண்டும்.