உறைந்த காலம் - கே ஜெயராம்


புகைப்படக்கலை குறித்த ஒரு ஆரம்பப் புரிதலுக்கான தொடக்கப்புள்ளியாக திட்டமிடப்பட்டஜெயராம் அவர்களின்காட்சி விளக்கம் மிகுந்த வரவேற்ப்பை பெற்ற ஒரு நிகழ்வாக இனிதே நடந்து முடிந்தது. 


 

அருவியின் ஜூன் மாத நிகழ்வு: ”அடுத்த தலைமுறைக்கான நாடகங்கள்”
        எமது ஜூன் மாத நிகழ்வில் வேலு சரவணன் அவர்கள்         “அடுத்த தலைமுறைக்கான நாடகங்கள்” 
என்னும் தலைப்பில் உரை நிகழ்த்துவார். 
     
                              பள்ளிசிறார் பங்கு கொள்ளும் சிறு நாடக நிகழ்வும் உண்டு.  

         
வேலு சரவணனின் இரு ஒளிப்படங்கள் உங்கள் பார்வைக்கு:


 


                
தொடர்புக்கு: 98432 94085 / 94421 01335  

காலத்தின் நாண்


WORDS ARE BOUND IN CHAINS,
WHILE HAPPILY SOUNDS ARE STILL FREE
                                                    - LUDWIG VAN BEETHOVEN
கடந்த ஃபெப்ருவரி 17 அன்று நடைபெற்ற எமது நிகழ்வு, தொடக்கத்தில் இயக்குனர் மணி கவுலின் ஹிந்துஸ்த்தானி இசை குறித்த ”த்ருபத்” என்னும் ஆவணப்படத் திரையிடலுக்குப் பின் புதுக்கோட்டை மரபில் வந்த லய வழி கலைஞர்களின் வாழ்வும், பங்களிப்பும் குறித்த  லலிதாராமின் ஊடக விளக்கத்துடனான உரையாகவும் அமைந்தது,


தமிழ் எழுத்தாளர் அம்பையின் வரிகளில்,கர்நாடக சங்கீதத்தின் ஒரு பொற்காலத்தைப் பற்றிப் பேசுவோரையேவாழும் ஆவணங்களையே கூட நாம் ஒவ்வொருவராய் இழந்து கொண்டிருக்கிறோம்– இந்த இழப்பை நினைத்து வருந்தக்கூடிய விழிப்பும் நமக்கு இல்லைஇவர்களிடம் பொதிந்திருக்கும் அரிய தகவல்களைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளும் ஊக்கமும் நமக்கு இல்லை. இசையில் நாட்டமுள்ள இளைஞர்கள் அனைவருக்கும் இந்த இழப்பு பெரும்வலியாக இருக்கிறதுஆனால் ஒரு சிலராலேயே இந்த இழப்பில் இருந்து சேகரிக்கக் கூடியதைக் காப்பாற்றித் தர முடிகிறது-எது நல்ல சினிமா- பதிவுகள்
எது நல்ல சினிமா- பதிவுகள்
தியடோர் பாஸ்கரன்-பங்கேற்பு-உரை

             
சினிமா பற்றி அவதானிப்பும் அவை பற்றி அறிந்நு கொள்ள விழையும் மனங்களும் அதிகம். சினிமா பற்றி நாள் கிழமை பொழுது என்றின்றி பேசிக்கொண்டே இருக்கும் சமூகம் நம்முடையது. ஒரு பொழுதும் சுவாரசியம் குறையாதது. அருவியின் சினிமா பற்றிய நிகழ்வு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த முறை இந்தியத் தொழில் வர்த்தக சபையின் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. ஒரு கட்டமைப்புடன் நேர்த்தியாக நடைபெற்ற நிகழ்வு என்று சொல்லலாம். நல்ல செய்திகளை,தரமான படைப்புகளைக் கொண்டு சேர்ப்பதற்கு எடுக்கும் முயற்சிகள் குறைந்த பட்சம் ஒரு அறிதல் அளவிலாவது வேண்டும்.