அருவியின் அடுத்த நிகழ்வு: இந்திய ஓவியத்தில் நவீனத்துவம் - மோனிகாஅருவியின் அடுத்த நிகழ்வு வரும் சனிக்கிழமை (21 ஏப்ரல் 2012) மாலை 5 மணி முதல் அவினாசி சாலையில், கிருஷ்ணம்மாள் கல்லூரி எதிரில் உள்ள காண்டெம்ப்ளேட் ஓவியக்கூடத்தில் திருமதி மோனிகா அவர்கள் வழங்கும் பல்லூடக விளக்கத்துடனான உரை மற்றும் அழகின் எளிமை என்னும் எழுத்தாளர் சூடாமணியின் ஓவியங்கள் குறித்த ஆவணப்படத்திரையிடல் ஆகியன  நடைபெறும். எல்லா நண்பர்களையும் வரவேற்க்கிறோம். தங்கள் நண்பர்களுடனும் இந்நிகழ்வு குறித்த செய்தியைப்பகிர்ந்து கொள்ளவும்.