தார்க்கோவ்ஸ்கியின் கலைஆந்த்ரேய் தார்க்கோவ்ஸ்கி


திரைப்படக் கலையை முன்னெடுத்து சென்ற மேதைகளில் ரஷ்ய இயக்குநர் ஆந்த்ரேய் தார்க்கோவ்ஸ்கி முக்கியமானவர்.  தனக்கென தனிப் பாணியை உருவாகியவர். ஐஸென்ஸ்டைனைப் போல உலகெங்கும் அறியப்படும் ஒரே ரஷ்ய திரைப்பட மேதை.. இவர் வழியில் இயக்குநர்கள் தொடர்ந்து  உருவாகிக்கொண்டிருப்பது இவரது கலை என்றும் வாழும் என்பதற்கு சாட்சியமாகிறது.1932 ஆம் வருடம் ரஷ்யாவில் மாஸ்கோவின் அருகிலுள்ள ஜவராச்சியில் பிறந்தார். அரசு திரைப்படக் கல்லூரியில் படித்தபோது அவர் உருவாக்கிய குறும்படங்கள் சிறப்பானவை. தார்க்கோவ்ஸ்கி தனது குறுகிய வாழ்நாளில் உருவாக்கியது ஏழு முழு நீள திரைப்படங்கள் மட்டுமே. அவரது ஏழு திரைப்படங்களும் அமரத்துவ படைப்புகள்; என்றும் புதுமையுடன் பார்பவரை  ஈர்ப்பவை. தார்க்கோவ்ஸ்கி திரைப்படத்தை கவிதையாக (Cinema as poetry) கண்டவர். காலத்தை முன் வைத்து. தனது திரைப்படங்களை உருவாக்கியவர். காலத்தை செதுக்கும் சிற்பியாக தன்னை எடுத்துக்கொண்டார். தனது திரைப்படங்களை பிறர்  அர்த்தப்படுத்தி விளக்குவதை அறவே வெறுத்தார். திரைப்படங்கள் உணரப்பட்டு உள்வாங்கப்பட வேண்டியவை; அறிவு பூர்வமாக  அணுகப்படவேண்டியவை அல்ல என்பதை வற்புறுத்தினார்.  தனது கலையையும்  படைப்பாக்க முறையையும் பிறருக்கு எடுத்துச் சொல்வதற்காக அவர் எழுதிய நூல் ‘Sculpting in Time’.


 
தார்க்கோவ்ஸ்கி மனிதத்துவத்திற்கு முதலிடம் கொடுததவர். ட்ரையர்ப்ரெஸ்ஸோன் போன்று ஆன்மீகத்தை முனவைத்தவர். மதவாதி அல்ல.  அவர்   படைப்புகள் மனிதத்துவ அடிப்படையில் உருவானவை; அழகியலாக பரிணமிப்பதாக தோற்றமளித்தாலும் அரசியல்சமூக கூறுகளை உட்கொண்டவை.   சிறந்த செவ்வியல் இசை, எழுத்து போல தார்க்கோவ்ஸ்கியின் படைப்புகள்  மறுவாசிப்புக்கானவை. வழக்கமான உத்திகளையும், படத்தொகுப்பு முறையையும் தவிர்த்து உருவாக்கப்பட்டிருப்பதால்அவருடைய திரைப்படங்கள் சிலருக்கு முதலில்  நெருடலை அளிக்கலாம். பழக்கமாகிவிட்டால்அவர் திரைப்படங்களை காணும் ஒவ்வொரு முறையும்  புதிய, அற்புதமான அனுபவங்களைப் பெறலாம்.


இன்னல்களையும் தடைகளையும் மீறி திரைப்படத்தை உன்னத கலை வடிவமாக எடுத்துச் சென்ற இந்த மேதை  தனது   இறுதி நாட்களில் புலம் பெயர்ந்து இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில்  வாழ நேர்ந்தது.    1986 ஆம் வருடம் டிசம்பர் 29 அன்று  தனது ஐம்பத்து நான்காவது வயதில் பாரிசில் மரணமடைந்தார். தேவதூதனை நேரில் கண்ட  மனிதனுக்கு (To the man who saw the Angel)என்பது    தார்க்கோவ்ஸ்கியின்  கல்லறையில் ரஷ்ய சிற்பி ஒருவரால்  செதுக்கப்பட்டிருக்கும் வாசகம. . ‘திரு ஆனந்த் அவர்களால் தமிழினி இதழிலும், கோணங்கள் வலைப்பூவிலும் எழுதப்பட்டு வெளிவந்துள்ள தார்க்கோவ்ஸ்கி குறித்த கட்டுரைகளின் சுட்டிக்கு இங்கே சொடுக்கவும்.


சுட்டி பகுதி 1
 

சுட்டி பகுதி 2
1 comment: