வா மணிகண்டனின் ”கவிதை மொழி”- நான்காம் நிகழ்வு

வழமை போலவே இந்த நிகழ்வும் பழைய 20 பேரும் புதிய 10 பேருமென இனிதே நடந்தேறியது. இளம் கவிஞரும், கணினித்துறையைச்சேர்ந்தவருமான வா மணிகண்டன் நமது கோவையை அடுத்துள்ள கோபியைச்சேர்ந்தவர், தற்சமயம், பங்களூருவில் பணி.

வா மணிகண்டன்
 
திரு இளங்கோ கிருஷ்ணன் அவர்கள் வாசித்த வா மணிகண்டனை குறித்த அறிமுகத்துடன் நிகழ்வைத்துவக்கினோம்.

இளங்கோ கிருஷ்ணன் வழங்கும் அறிமுகம்
இந்நிகழ்வில், வா மணிகண்டன் தனது உரையை தமிழ்க்கவிதையுடனான அனுபவப்பகிர்வாக ஒழுங்கு படுத்தியிருந்தார். வாழ்க்கையின் பேரலையினூடே தான் கடந்து வந்த கணங்களின் வழியில் கிடைத்த அனுபவங்கள், அறிந்த தத்துவங்கள், இசங்கள், இத்தியாதிகள் மூலம் பெற்ற தெளிவென, தனது உதிரித்தன்மையை ( உதிரியாக இருப்பது, உதிரியாகவே தொடர்வது………) முன் வைத்து தன் உரையை ஒரு செழுமையான உரையாடலை நோக்கி நகர்த்தினார். இது வந்திருந்த நண்பர்களிடம் ஒரு சலசலப்பை உண்டு பண்ணியது நிகழ்வுக்கு ஒரு முழுமையை தந்தது என்றே சொல்ல வேண்டும்.

வா மணிகண்டன் உரையாடும் காட்சி

இந்நிகழ்வு குறித்த வா மணிகண்டனின் பதிவு மற்றும் எதிர்வினையினை இந்தலின்க்கில் படிக்கவும்.

இன்னொரு நண்பரும் கணித ஆசிரியருமான திரு வீரராகவன் அவரது வலைப்பூவில் எழுதியுள்ள நமது நிகழ்வு குறித்த பதிவினை இந்த லின்க்கில் படிக்கவும்.

இந்நிகழ்வின் மேலும் சில படங்கள் இங்கே………..

கல்லூரி மாணவி ஜெகதீஸ்வரி நிகழ்வினை தொகுத்து வழங்குகிறார்

 
நண்பர்கள் -பார்வையாளர்கள்
நண்பர் சீனுவின் முடிவுரை


திரு பொதியவெற்பன் அவர்களிடமிருந்து நினைவுப்பரிசு பெறும் வா. மணிகண்டன்அருவியின் அடுத்த நிகழ்வாக பேராசிரியர் திரு. செ. ராமானுஜம் அவர்களின்நவீன நாடகம்- தோற்றமும் வளர்ச்சியும்என்ற நிகழ்வு 18 டிசம்பர் 2011 அன்று கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாக அரங்கில் நடைபெறும்.
No comments:

Post a Comment