நவீன நாடகம் : தோற்றமும் வளர்ச்சியும் by பேராசிரியர் செ ராமானுஜம்

அருவியின் நவீன நாடகம் குறித்த அடுத்த நிகழ்வுக்கான அழைப்பினை ஏற்று நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.


தங்களின் பிற நண்பர்களிடம் முக நூல் மற்றும் மின்னஞ்சல் வழி பகிர்ந்து உதவுமாறும் வேண்டுகிறோம்.   நன்றி...!

வா மணிகண்டனின் ”கவிதை மொழி”- நான்காம் நிகழ்வு

வழமை போலவே இந்த நிகழ்வும் பழைய 20 பேரும் புதிய 10 பேருமென இனிதே நடந்தேறியது. இளம் கவிஞரும், கணினித்துறையைச்சேர்ந்தவருமான வா மணிகண்டன் நமது கோவையை அடுத்துள்ள கோபியைச்சேர்ந்தவர், தற்சமயம், பங்களூருவில் பணி.

வா மணிகண்டன்
 
திரு இளங்கோ கிருஷ்ணன் அவர்கள் வாசித்த வா மணிகண்டனை குறித்த அறிமுகத்துடன் நிகழ்வைத்துவக்கினோம்.

அன்பு நண்பர்களே.,

நமது நான்காம் நிகழ்வு வரும் 16 அக்டோபர் 2011 அன்று கோவையில் கீழே உள்ள முகவரியில் நடைபெறும். அனைவரும் வருகை தந்து விழாவினை சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம். நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளவும்.

தலைப்பு:         கவிதை மொழி
வழங்குபவர்:  திரு வா. மணிகண்டன்
இடம்:               சித்ர மஹால், 
                          பழைய கங்கா மருத்துவமனை அருகில்,
                          ராம் நகர், 
                          கோவை-9
நேரம்:              காலை 0945 மணி முதல்
 


தொடர்புக்கு:

  சீனு: 98432 94085  சூரி: 94421 01335


தமிழில் மொழிபெயர்ப்பின் வழித்தடங்கள்- 3 ம் நிகழ்வு


அருவியின் இந்த மூன்றாம் நிகழ்வில், அசதா அவர்கள் தமிழில் மொழிபெயர்ப்பின் வழித்தடங்கள்என்ற தலைப்பில் தனது உரையை தெள்ளத்தெளிவாய் வழங்கியது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது என்றால் அது மிகையாகாது….! அவரது உரையின் எழுத்து வடிவம் இங்கே……..


தமிழில் மொழிபெயர்ப்பின் வழித்தடங்கள்


அசதா


படைப்பிலக்கியத்துக்கு நிகராக மதிக்கப்படும் மொழிபெயர்ப்பு இலக்கியமானது உலகில் வழங்கிவரும் பல்வேறு மொழிகளின் பிரதிகளினூடாக காணும் பல்வேறுபட்ட மக்களது கலைரீதியான உணர்வு வெளிப்பாடு முதல் காலாச்சரம், பண்பாடு, வாழ்முறை, அரசியல், சிந்தனைப்போக்கு என யாவற்றையும் எண்ணற்ற பெயர்ப்புப் பிரதிகள் வழி எல்லைகள் தாண்டி கொண்டு சேர்த்திருக்கிறது. தூலமான அரசியல், சமூக பிரயத்தனங்களை விடவும் உலக மானுடன் என்ற கருத்தாக்கம் மொழிபெயர்ப்புப் பிரதிகளினூடாக காலம் காலமாக இலக்கிய வாசகர்கள் மனதில் வலுவுடன் தொழிற்பட்டு வருகிறது. மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் வழியாக உலகின் இலக்கியங்கள் யாவும் புதிய வெளிச்சத்தையும் அதன் பாதிப்பினால் புதிய தடங்களையும் கண்டிருக்கின்றன. இதற்கு தமிழ் இலக்கியமும் விலக்கல்ல. தமிழின் நெடிய இலக்கியப் பாரம்பரியத்தில் தொன்று தொட்டே, மொழிபெயர்ப்பின் ஒரு வகையாக கருதப்படும் தழுவல் ஓர் அங்கமாக இருந்து வந்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் வடமொழி இலக்கியங்களைத் தழுவி படைப்புகள் ஆக்கப்பட்டதாக ஆய்வாளர் கூறுவர். கம்பனின் ராமாயணம் மிகப் போற்றப்படும் தமிழ்ப்படைப்பேயாயினும் அது வடமொழி மூலத்தைத் தழுவியது என்பதை நாம் மறக்கலாகாது. ஐரோப்பியர் வருகை தொடங்கி இன்று வரை தமிழிலக்கியத்துக்கு மொழிபெயர்ப்பாளர்கள் தொடர்ச்சியாகத் தங்கள் பங்களிப்பினைச் செய்து வருகின்றனர். தமிழிலக்கியச் சூழலில் மொழிபெயர்ப்பும் தனக்கென பொருட்படுத்தத்தக்க ஓர் இடத்தைக் கொண்டதாகவே இருக்கிறது.


மொழிபெயர்ப்பின் அவசியம், தேவை என்ன? வேறு ஒரு மொழியில் காணும் சிறந்த படைப்புக்களை ஒருவரது சொந்த மொழியினரும் வாசிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கித் தருதல் மற்றும் ஒருவரது சொந்த மொழியில் காணும் சிறந்த படைப்புக்களை வேற்று மொழியினரும் வாசிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கித் தருதல், இவையே (இலக்கியத்தில்)மொழிபெயர்ப்புக்கான தேவையை ஏற்படுத்துகின்றன. தமிழிலக்கியத்தில் மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் நிறுவனங்களைக் காட்டிலும் தனிநபர் தேர்வுகளைக் கொண்டே அமைந்தவை. தற்போது இப்போக்கு மாறி வருகிறது. திட்டமிட்ட வகையில் மொழிபெயர்ப்புகளை பதிப்பகங்கள் வெளியிட்டு வருகின்றன.


Translation என்ற வார்த்தை ‘translatio’ என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து வந்தது, இதற்கு ‘கொண்டு சொல்லுதல்’ என்று பொருள். ‘ஒரு மூல மொழிப் பிரதியின் அர்த்தத்தை  அப்பிரதிக்கு இணையான இலக்கு மொழிப் பிரதியின் வழியாக  வெளிப்படுத்துதலே மொழிபெயர்ப்பு.’ இந்த வரையறையை மொழிபெயர்ப்பு பற்றிய மிக அடிப்படையானவொரு வரையறையாகக் கொள்ளலாம். இதில் ‘அப்பிரதிக்கு இணையான’ என்ற பிரயோகம் கூர்ந்து கவனிக்கத்தக்கது. மொழிபெயர்ப்பு எனும்போது இலக்கிய மொழிபெயர்ப்பையே பெரிதும் நாம் சுட்டுகிறோம். தழுவல், சுருக்கம், மொழியாக்கம், நேர்மொழிபெயர்ப்பு என்பவற்றை மொழிபெயர்ப்பின் வகைகளாகக் கொண்டால் நேர்மொழிபெயர்ப்பே இலக்கிய மொழிபெயர்ப்பாக அமைய முடியும்.  ஏனென்றால் அதுவே ‘பிரதிக்கு இணையான’ எனும் அடிப்படையைக் கொண்டது. தழுவல் மூலப் படைப்பின் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு அதனை இலக்குமொழி சார்ந்த பண்பாட்டு கலாச்சார கூறுகளுக்கு ஏற்ப மீளாக்கம் செய்வது ஆகும். உலக இலக்கியத்தில் தழுவல் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பு முறையாகக் கொள்ளப்படுவதில்லை, அது மூல ஆசிரியருக்கு இழைக்கப்படும் துரோகமாகக் கருதப்படுகிறது. சுருக்கம் என்பது தேவை சார்ந்த எளிய மொழிபெயர்ப்பு முறை. அதிகமும் ஒரு படைப்பை அறிமுகம் செய்யும் வகையில் சுருக்கம் அமைகிறது. மொழியாக்கம் நேர்மொழிபெயர்ப்பில் கடும் சிக்கலையுண்டாக்கும் படைப்புகளை பிரதியுடனான பொருத்தப்பாடு, கருத்து சிதையாமை, கோர்வை இவற்றை அடிப்படைகளாகக்கொண்டு சிறிதளவு சுதந்திரத்துடன் வெளிப்பாட்டு சிக்கலற்ற பிரதியாக மொழிபெயர்ப்பது மொழியாக்கம். மொழியாக்க முறை அதிகமும் கவிதை மொழிபெயர்ப்பில் பயன்படுத்தப்படுகிறது. நேர் மொழிபெயர்ப்பு சமரசமற்ற இலக்கிய மொழிபெயர்ப்பு. மூலப் பிரதியினின்று சற்றும் வழுவாமல் மொழிபெயர்ப்புப் பிரதியை உருவாக்குவது.

தமிழில் உரைநடை வரலாற்றின் தொடக்கம் மொழிபெயர்ப்புகளின் வரலாறுதான்’¥ என்கிறார் மொழிபெயர்ப்புகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வரும் . முருகேசபாண்டியன். ஐரோப்பியர் வருகையை அடுத்து கிறித்தவ மத நூல்களும் விவிலியமும் (பைபிள்) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. பின் கடந்த நூற்றாண்டில் மத்தியில் சோவியத் யூனியன் பதிப்பகங்களான ராதுகா, முன்னேற்றப் பதிப்பகம், மீர் பதிப்பகம் போன்றன தமிழில் இலக்கியம் மற்றும் பல்துறை சார்ந்த ரஷ்ய நூல்களின் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டுள்ளன. ரஷ்ய இலக்கியங்கள் ஒரு படையெடுப்பாக தமிழுக்கு வந்து பரவலாக அவை வாசகரையும் சென்றடைந்தது தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க காலகட்டமாகும். பின், எண்பதுகளில் இலக்கியக் கோட்பாடு சார் உரையாடல்களைத் தமிழில் தொடங்கி வைத்ததில் மொழிபெயர்ப்புகளுக்குப் பெரும் பங்குண்டு. அமெரிக்க, ஐரோப்பியப் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டபோதும் தொண்ணூறுகளில் லத்தீனமெரிக்கப் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு தீவிரமானதொரு ஆர்வத்துடன் வாசிக்கப்பட்டன. தற்போது லத்தீனமெரிக்கப் படைப்புகள் மீதான தீவிரம் குறைந்துவிட்ட போதும் அப்பெருவிருப்பின் அதிர்வுகளை ஒருவர் இன்னும் உணர முடியும். இன்றைய நிலையில் பரவலாக, மேலை இலக்கியங்கள் மட்டுமல்லாது ஆப்பிரிக்க, ஆசிய நாடுகள் மற்றும் அதிகம் அறியப்படாத பிராந்தியங்களிலிருந்தும் படைப்புகள் தமிழிக்கு கொண்டுவரப்படுகின்றன.

மொழிபெயர்ப்பு எனும்போது இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்துள்ள படைப்புகள் குறித்தும் பதிவது அவசியம். பிற இந்திய மொழிகளோடு ஒப்பிடுகையில் மலையாளம், வங்காளம் ஆகிய மொழிப் படைப்புகள் தமிழில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தற்போது வங்காள மொழிப் படைப்புகள் அதிகம் மொழிபெயர்க்கப்படுவதில்லை என்றாலும் தொடர்ந்து மலையாள படைப்புகள் தமிழுக்கு வந்தபடியிருக்கின்றன.மலையாள-தமிழ் இலக்கிய உலகங்களுக்கிடையேயான உறவு இதற்கு காரணமாக இருக்கக் கூடும். கன்னடம், மாரத்தி, இந்தி போன்ற மொழிகளிலிருந்தும் படைப்புகள் தமிழுக்கு மொழிபெயர்க்கப்படுகின்றன. சாகித்ய அகாதமி, நேஷனல் புக் டிரஸ்ட் ஆகியன இந்திய மொழி படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வருதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தமிழிலிருந்து பிறமொழிகளுக்கு, குறிப்பாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவது அரிதாகவே நிகழ்கிறது. படைப்பின் தரத்தை விட படைப்பாளியின் தனிப்பட்ட செல்வாக்கே இதனை நிர்ணயிக்கும் நிலை உள்ளது. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குப் படைப்புகளைக் கொண்டு செல்ல தகுதி படைத்த மொழிபெயர்ப்பாளர்கள் இல்லையென்பது ஒருபுறம் இருந்தாலும் இம்மாதியான செயல்பாடுகளை நிறுவனங்கள் ஆதரித்து வளர்க்கும் நிலை இங்கு இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

மூன்றாம் நிகழ்வு - அறிவிப்பு


அருவியின் 3 ம் நிகழ்வாக “ தமிழில் மொழிபெயர்ப்பின் வழித்தடங்கள் ” என்ற தலைப்பில் திரு அசதா அவர்கள் உரையாற்றுவார். கீழே தந்துள்ள அழைப்பினை ஏற்று நண்பர்கள் அனைவரும் வருகை தந்து நிகழ்வை சிறப்பித்து தருமாறு வேண்டுகிறோம்.


நிகழ்வு - 2 “பிரமிளின் படைப்புலகம்”- 19 ஜூன் 2011


நிகழ்வின் அறிமுகம்

நிகழ்வின் நினைவுக்காக......

நிகழ்வு 2, மீண்டும் தியாககுமாரின் பயிலகத்தில் 19 ஜூன் 2011 அன்று நடந்தது. இந்நிகழ்வில், ”பிரமிளின் படைப்புலகம்” என்ற தலைப்பில் பிரமிளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த திரு கால சுப்பிரமணியம் அவர்கள் உரையாற்றினார்.  

அருவியின் முதல் நிகழ்வு - 15 மே 2011
”அருவி” – ஒரு புதிய அமைப்பாக மே மாதத்தின் மூன்றாவது ஞாயிறன்று (15 05 2011), தன் பயணத்தை உயிர்மெய்யின் நீட்சியாய் தொடர்ந்தது. நண்பரும் இலக்கிய ஆர்வலருமான திரு தியாக குமார் தனது பயிற்சி மையத்தினை நமக்குத்தந்துதவியது, இந்த நிகழ்வை சாத்தியப்படுத்தியது. எங்களை நெகிழ வைத்தது. எதிர் பார்த்தது போலவே கோவையில் உள்ள சுமார் ஐம்பது இலக்கிய ஆர்வலர்களில் அன்று சாவகாசமாக தத்தமது வீடுகளில் லெளகீக கடமைகளை முடித்து விட்டு, எல்லா இலக்கிய நிகழ்வுகளிலும் போல, ஒரு குட்டி வட்டமாக (பதினெட்டு பேர்) கூடி பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொண்டு கவிஞர் புவியரசு அவர்கள் முன்னிலையில் சந்திப்பைத்துவக்கினோம். கணக்குப்பித்தன் என்று தன்னை சொல்லிக்கொள்ளும் தமிழார்வலர் திரு வீரராகவன், நமது அழைப்பை ஏற்று வந்ததோடு அனைவருக்கும் குறிப்பெடுத்துக்கொள்ள ஏதுவாக ஒரு பேனாவும், குறிப்பேடும் தந்து ஆச்சரியப்படுத்தினார். 
சீனு அவர்களின் அறிமுகவுரை
 எங்கள் நிலைப்பாடு, அருவிக்கான இன்றைய அவசியம் மற்றும் எங்களது இலக்குகளும் அதை ஒட்டிய உத்தேசங்களும் செயல்பாடுகளும் அடங்கிய திட்ட நிரலை நண்பர் திரு. ஸ்ரீனிவாசன் வாசித்தார். முதல் அமர்வில், புது எழுத்து ஆசிரியர் திரு மனோன்மணியை, அவரது நீண்டகால இலக்கியப்பயணத்தின் அங்கீகாரமாக தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தால் வழங்கப்பட்டுள்ள சிறந்த சிறுபத்திரிகைக்கான விருதுக்காக பாராட்டி திரு புவியரசு சுருக்கமாக மனோன்மணியின் பிடிவாதமான இலக்கிய முயற்சிகளுக்கான பாராட்டுக்களையும், புது எழுத்தின் மொழியாக்க முயற்சிகளில் உள்ள வெளிப்படையான சில கவனத்துக்குரிய விஷயங்களாக, புரியாத்தன்மை மற்றும் சில அடிப்படை மொழிமாற்ற சறுக்கல்கள் பற்றிய தனது அய்யங்களையும் வெளிப்படுத்தினார். தொடர்ந்து திரு மனோன்மணி, தனது ஏற்புறையில், அவரது, தனிமனித செயல்பாடுகள், நேர்ந்துள்ள அவமானங்கள், தேடி கண்டடைந்த ஆச்சரியங்கள், அற்புதமான மனிதர்கள், நண்பர்கள், தனது குடும்பம், மனைவி மற்றும் தனது வீழ்ச்சிகள் என விஸ்தாரமாக தான் செயல்படும் களம் குறித்தான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 
மனோன்மணியின் உரை
இதைத்தொடர்ந்து, கலந்துகொண்ட எல்லா நண்பர்களையும் உட்படுத்திய ஒரு கலந்துரையாடலில் பலரது கருத்துக்களும் பரிமாரிக்கொள்ளப்பட்டன. இந்த பரிமாற்றங்களில் சொல்லப்பட்ட கருத்துக்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்:

"அருவி" யின் அவசியம்


உயிர்மெய் வாயிலாக எங்கள் இலக்கிய தேடல், 1982 ல், கல்லூரி நாட்களில் தொடங்கியது. எங்கள் சிறு வட்டம், சீனு, சூரி மற்றும் நை. .சுரேஷ்குமார் ஆகிய நண்பர்களின் விடா முயற்ச்சியின் விளைவாக தழைத்தது. முதல் இதழ், ஒரே தாளை நான்காக மடித்த வடிவில் வெளியானது. அச்சமயம், கவிதைகள் என்று எங்களை வந்தடைந்த அறிமுகப்படைப்புகள் பெரும்பாலும், விடுகதைகள், கோஷங்கள் என ஏமாற்றத்தையே தந்தன. நான்காம் இதழிலிருந்து எண்பதுகளில், இலக்கியத்தடத்தில் பரவலாக அறியப்பட்ட படைப்பாளிகளின் கவிதைகள், ஒரு வெளியீட்டுத்தன்மையுடன் பிரசுரிக்கப்பட்டன. ஆறாம் இதழ் முதல் எட்டாம் இதழ் வரை நமக்குப்பழக்கப்பட்ட வடிவத்தில் உயிர்மெய் வெளியீடுகள் தொடர்ந்து வந்தபின் சிற்றிதழுக்கேயான சாபக்கேடாக தன் பயணத்தை நிறுத்திக்கொண்டது. எங்களின் தேடலை முறையாக திரு வல்லிக்கண்ணன் அவர்கள், தனது புதுக்கவிதை- தோற்றமும் வளர்ச்சியும் என்கிற நூலில் பதிவு செய்துள்ளார்.

எங்கள் லெளகீக நிர்பந்தங்களின் அழுத்தத்திலிருந்து ஓரளவு வெளிவந்துள்ள இன்றைய சூழலில், முந்தைய தேடலின் நீட்சியாக ஒரு புதிய முயற்சியின் அவசியத்தை உணர்ந்துள்ளோம். இத்தாக்கத்தின் உருவாக்கமேஅருவிகலை என்பது மனித வளர்ச்சி வரலாற்றில் கிடைத்து விட்ட இடை விளை பொருள் அல்ல. மாறாக மனித இனம், மனித இனமாக வளர்ந்துவந்ததற்க்கான அத்தாட்சியாகும். கலை என்பது சமுதாயத்தில் ஒரு சிறிய பிரிவினருக்காகவே இருப்பது என்பது அபாயகரமானது.
                                                                                                             - ஜோசப் ப்ராட்ஸ்கி

அனைத்துக்கலை வடிவங்களும் இயல்பாகவே பயணிப்பது ஒரு புள்ளியை நோக்கியே…. ஒவ்வொரு கலை வடிவமும் மற்ற கலை வடிவங்களின் ஊடாகப்பயணித்து அதனதன் அர்த்தத்தையும் வாழ்வியல் உண்மைகளையும் வெளிப்படுத்தும். அதன் மூலம் இவற்றுள் ஒருவித ஒருங்கிணைப்பை உணர இயலும். உதாரணமாக, இசைக்கு சுதந்திரமும் பரப்பும் அதிகம். ஒவியத்திற்க்கு சொல்லவே வேண்டியதில்லை, அது முடிவற்ற சிந்தனையை விரித்துச்செல்லும். இவற்றையெல்லாம் எழுத்தில் ஒருமைப்படுத்தும் சாத்தியம் அரிதாகவே தென்படுகிறது. ஒட்டுமொத்த கலைகளில் நம் அனுபவ வெளிப்பாடுகளின் தேடல் எப்பொழுதும் நமக்குப்புலப்படாத ஒரு பேருண்மையை நோக்கிப்பயணிப்பவையே…. ஒவ்வொரு தனி மனிதனின் தேடலும் மற்றவர்களின் அனுபவத்தை அறிவதிலும் பகிர்வதிலும் தானே உள்ளது.

இந்த பகிர்தலை முன்னிலைப்படுத்தி, ஒத்த கருத்துள்ள நண்பர்களை ஒருங்கிணைத்து இனி தொடரப்போகும் நம் பயணம் குறித்த ஆலோசனைகளையும், ஆக்க பூர்வமான எல்லா கலை முயற்சிகளையும் விவாதிக்கும் ஒரு களமாக செயல்படுதல் குறித்தும் கருத்து வேறுபாடுகள் கசப்பற்ற முறையில் பதிவு செய்யப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் இந்த நிகழ்வின் மூலமாக முடிவு செய்து, அருவி யின் எதிர்கால செயல்பாடுகளை தீர்மானிக்க, விழைகிறோம்.

அருவியின் செயல்பாடுகளாக நாங்கள் உத்தேசித்துள்ளவை:

v     படைப்பாளி சந்திப்பு
v     படைப்பைப்பற்றிய வாசக அனுபவ பகிர்வுகள்
v     புத்தகம் மற்றும் கவிதை வாசிப்பு
v     புத்தக பரிமாற்றம்
v     குழந்தைகளுக்கு கதை சொல்லல்
v அனைத்து கலை வடிவங்களின் கலைஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் நேர்காணல்.அவர்கள் எங்கும் போய் சேர்ந்து விடவில்லை
ஆனால் எங்கோ போயிருந்தார்கள்.
நீ போய்க்கொண்டிருக்கும் போதும்
கேட்டேன் எங்கென்று
தெரியவில்லை, போகிறேன் என்றாய்.

புரியும் தினம்
எனக்கும் வரலாயிற்று.
நின்று கொண்டிருப்பதை விட
சென்று கொண்டிருக்கலாம் 
                          - கல்யாண்ஜி
                                     .